Friday, March 18, 2016

மௌனங்கள்

நீல வானத்தின் மௌனங்கள் 
மழை பெய்யும் போது கரைகிறது!

மௌனத்தில் மறைந்த பூக்களால் 
வாசத்தை மறைக்க முடியவில்லை!

இரவின் மௌனம் பகலில் தொலையும்!
உந்தன் மௌனம் புன்னகையில் தொலையும்!

சலனமற்று போன என் இமைகளை,
உன் மௌனப்புன்னகை - சற்றே 
விழித்தெழ செய்தது!

உன் மௌனம் என் காதில் மட்டும் 
ஒலிக்கும் மிகப்பெரிய சப்தமாய் மாறி போனது !

தீர்ந்து போன உன் நட்பின் முடிவில் 
எஞ்சி நிற்பது உன் மௌனக்கனவுகளே!

உன் மௌனம் தாண்டினால்,
உன்னில் என்னை பார்க்கிறேன்!

மௌனத்தின் நிசப்தம் ஒன்றும் அமைதி அல்ல!
மௌனம் காயங்களை மறைக்கும் கவிதை!

உன் மௌனங்கள் வன்முறையானது,
நீ என்னை விட்டு விலகி சென்ற போது!

மௌனத்தின் கற்பனையெல்லாம் - உன்னோடு 
பேச முடியாத வார்த்தைகள் தான்!

No comments: