நிலவின் உடையை மலைகளுக்கு பின்னால்
மாற்றி கொண்டிருக்கும் சூரியன்...
பனித்துளியின் பரிசத்தில்
பச்சையாய் பல்லிளித்து காட்டும் இலைகள்....
மனதை வருடும் மகிழம் பூக்களின் வாசனைகள்...
எனக்கான நாளைய கனவுகளை
மெல்ல மெல்ல சுமந்து வரும் இருள்.. -- என
இவை அனைத்தும் இருந்தும்,
அவற்றை பற்றி கவிதை எழுதாமல்
உன் மழலை சிரிப்பையே
ரசித்து கொண்டிருக்கிறேன்!