கனவுகள் மட்டும் இல்லையெனில், என்றோ கண்ணீரில் கரைந்திருப்பேன்!
கோபமும் வெறுப்பும் தீர்ந்த பின், எஞ்சி நிற்பது அன்பு
மட்டுமே!
அளவில்லா காதல் , அடுத்த நிமிட வெறுப்பு..
முரண்களின் உருவம் நீ!
மற்றவர்களை விட உன் நேர்மை அதிகமானால்
எளிதில் சந்தேகிக்க படுவாய்!
மௌனத்தின் கற்பனையெல்லாம் - உன்னோடு
பேச முடியாத வார்த்தைகள் தான்!
உன் வண்ணங்கள் தீர்வதில்லை, அவை அழகிய ஓவியமாகின்றன!
மௌனத்தின் வேர்களில் இருந்து புன்னகை முளைக்கும்!
புன்னகையின் முடிவில் இருந்து உறவுகள் பூக்கும்!
பிரிவை சந்திக்காத மனிதன் எவனும் இல்லை..
பிரிவினால் மனிதன் இறப்பான் எனில்,
இவ்வுலகம் இன்று இல்லை!
இக்கணம் பிரிவு அல்ல தோழி!
இக்கணமே நம் நினைவுகள்தானடி தோழி!
மேகத்தின் மேலே பறந்த பறவையொன்று,
மின்னல் தாக்கி , கருகி கீழே விழுந்தது .
†*****************************†
என்னிடம் உள்ள நேரங்களை,
உனக்காக என ஆக்கி,
விரைவாய் முடிவை நோக்கி நகர்ந்தேன்..
†*****************************†
பறக்க ஆசைப்படுகிறேன்,
இறக்கைகள் இன்றி...
நட்பை தொடர விரும்புகிறேன்,
நம்பிக்கை இன்றி...
†*****************************†
என் நினைவுகளை ஒதுக்கினாய்,
என் உடலை என்ன செய்ய போகிறாய்..
†*****************************†
என் இரவெல்லாம் தொடரும்,
உன் நினைவின் கனவுகள்,
நிகழாது போன நிமிடங்கள்..
†*****************************†
பாதை மறந்து நிற்கிறேன்,
உன்னை தொலைத்து அழுகிறேன்..
†*****************************†
பிரிவின் முதற்கண் , நீ காட்டிய அலட்சியம்...
மற்றொன்று, வாடிக்கையாய் போன உனது மன்னிப்பின் கோரிக்கைகள்..
மூன்றாவது கண்ணை நீ பார்க்க விரும்பினால்,
என் கண்ணீரை துடைத்து பார்...
†*****************************†
வானம் மண் மீது வீழ்ந்து விட்டால்,
மழைத்துளியில் நாம் நனைவது எப்படி?
†*****************************†
என் கண்ணீர் ,
நீ இருக்கும் இடம் தேடி,
வழிந்தோடுவது ஏன்?
†*****************************†
உனக்கான என் கவிதைகள்,
உயிருள்ள என் உணர்வுகள்..
உன்னுள் விதைக்க படாத
என் கவிதைகள்,
என்னுள் ரணமாய் மாறுகின்றன..
†*****************************†
நம் அன்பு,
மாறி விடும் என்று நட்பை தொடங்கவில்லை...
மாறாது இருக்கட்டும் என்றே தொடர்கிறோம்...
ஆனால், மாறாமல் இருக்கும் பிரிவின் காரணங்களை,
மாற்ற போவது யார்?
†*****************************†
நான் தூங்காமல் தவிக்கும்,
இந்த இரவின் காரணங்கள்,
நீண்டதொரு பெருங்கனவாய்,
என்னை தொடருமோ...
†*****************************†
நிழல் கூட என்னை விட்டு விலகிய போது,
நிராகரிப்பின் வலி,
நிரந்தரமானது..
கண்ணீர் தீரும் வரை
அழுதாலும்,
சில சோகங்கள் தீர போவதில்லை...
பிரிவின் தீரா துயரம் மரணம்..
அதை விட பெருந்துயரம்,
உன் பிரிவு...
நொறுங்கி விழுந்த நட்சத்திரங்கள்...
இருளை தந்து இறக்கின்றன....
பிரிவின் தருணம் இது...
உன் இதழ் சொல்லும் மன்னிப்பில், என் இதயம் கரையாது..
உன் இதயம், விடும் கண்ணீரில் ,
உன் கண்ணீர் துடைக்க, நான்
வருவேன்...
காட்சிகள் மாறும்..
ஆயிரமாயிரம் சந்தோஷங்களும், ஆயிரமாயிரம் சோகங்களும்,
மரணத்தில் முடிந்து,
மறக்கடிக்கப்படுவதே வாழ்க்கை...
என் நினைவுகளில் நீங்காத
உன் காதல்,
என் கனவிலும் தீராமல்,
என் நிஜத்தில் நிழலாய்
தொடருகிறது.
என்னை எனக்கு பிடிக்காமல் செய்த புயல் காற்றும் நீ தான்..
என் வலிகளை வருடி செல்லும் தென்றலும் நீ தான்...
என் மரணம், என் உடலில் உயிர் போன பின்பு வருவதில்லை..
நீ என்னை கண்டுகொள்ளாமல் இருக்கும் சிறிய தருணங்களில் கூட வந்துவிடும்..
************************
கனவின் மேலடுக்கில், கற்பனையொன்று எழுந்தது..
அதிலே, நீ என்னை விட்டு விலகி செல்லும் பிம்பம் ஒன்று தெரிந்தது..
இது நிஜமில்லை, கனவுமில்லை..
கனவில் ஓர் கற்பனையென்று ,
என் மனது அறிந்தாலும் ..
என் மனம் ஏனோ முட்கள் தைத்த இதயமாய் வலித்தது..
கோபமும் வெறுப்பும் தீர்ந்த பின், எஞ்சி நிற்பது அன்பு
மட்டுமே!
அளவில்லா காதல் , அடுத்த நிமிட வெறுப்பு..
முரண்களின் உருவம் நீ!
மற்றவர்களை விட உன் நேர்மை அதிகமானால்
எளிதில் சந்தேகிக்க படுவாய்!
மௌனத்தின் கற்பனையெல்லாம் - உன்னோடு
பேச முடியாத வார்த்தைகள் தான்!
உன் வண்ணங்கள் தீர்வதில்லை, அவை அழகிய ஓவியமாகின்றன!
மௌனத்தின் வேர்களில் இருந்து புன்னகை முளைக்கும்!
புன்னகையின் முடிவில் இருந்து உறவுகள் பூக்கும்!
பிரிவை சந்திக்காத மனிதன் எவனும் இல்லை..
பிரிவினால் மனிதன் இறப்பான் எனில்,
இவ்வுலகம் இன்று இல்லை!
இக்கணம் பிரிவு அல்ல தோழி!
இக்கணமே நம் நினைவுகள்தானடி தோழி!
மேகத்தின் மேலே பறந்த பறவையொன்று,
மின்னல் தாக்கி , கருகி கீழே விழுந்தது .
†*****************************†
என்னிடம் உள்ள நேரங்களை,
உனக்காக என ஆக்கி,
விரைவாய் முடிவை நோக்கி நகர்ந்தேன்..
†*****************************†
பறக்க ஆசைப்படுகிறேன்,
இறக்கைகள் இன்றி...
நட்பை தொடர விரும்புகிறேன்,
நம்பிக்கை இன்றி...
†*****************************†
என் நினைவுகளை ஒதுக்கினாய்,
என் உடலை என்ன செய்ய போகிறாய்..
†*****************************†
என் இரவெல்லாம் தொடரும்,
உன் நினைவின் கனவுகள்,
நிகழாது போன நிமிடங்கள்..
†*****************************†
பாதை மறந்து நிற்கிறேன்,
உன்னை தொலைத்து அழுகிறேன்..
†*****************************†
பிரிவின் முதற்கண் , நீ காட்டிய அலட்சியம்...
மற்றொன்று, வாடிக்கையாய் போன உனது மன்னிப்பின் கோரிக்கைகள்..
மூன்றாவது கண்ணை நீ பார்க்க விரும்பினால்,
என் கண்ணீரை துடைத்து பார்...
†*****************************†
வானம் மண் மீது வீழ்ந்து விட்டால்,
மழைத்துளியில் நாம் நனைவது எப்படி?
†*****************************†
என் கண்ணீர் ,
நீ இருக்கும் இடம் தேடி,
வழிந்தோடுவது ஏன்?
†*****************************†
உனக்கான என் கவிதைகள்,
உயிருள்ள என் உணர்வுகள்..
உன்னுள் விதைக்க படாத
என் கவிதைகள்,
என்னுள் ரணமாய் மாறுகின்றன..
†*****************************†
நம் அன்பு,
மாறி விடும் என்று நட்பை தொடங்கவில்லை...
மாறாது இருக்கட்டும் என்றே தொடர்கிறோம்...
ஆனால், மாறாமல் இருக்கும் பிரிவின் காரணங்களை,
மாற்ற போவது யார்?
†*****************************†
நான் தூங்காமல் தவிக்கும்,
இந்த இரவின் காரணங்கள்,
நீண்டதொரு பெருங்கனவாய்,
என்னை தொடருமோ...
†*****************************†
நிழல் கூட என்னை விட்டு விலகிய போது,
நிராகரிப்பின் வலி,
நிரந்தரமானது..
கண்ணீர் தீரும் வரை
அழுதாலும்,
சில சோகங்கள் தீர போவதில்லை...
பிரிவின் தீரா துயரம் மரணம்..
அதை விட பெருந்துயரம்,
உன் பிரிவு...
நொறுங்கி விழுந்த நட்சத்திரங்கள்...
இருளை தந்து இறக்கின்றன....
பிரிவின் தருணம் இது...
உன் இதழ் சொல்லும் மன்னிப்பில், என் இதயம் கரையாது..
உன் இதயம், விடும் கண்ணீரில் ,
உன் கண்ணீர் துடைக்க, நான்
வருவேன்...
காட்சிகள் மாறும்..
ஆயிரமாயிரம் சந்தோஷங்களும், ஆயிரமாயிரம் சோகங்களும்,
மரணத்தில் முடிந்து,
மறக்கடிக்கப்படுவதே வாழ்க்கை...
என் நினைவுகளில் நீங்காத
உன் காதல்,
என் கனவிலும் தீராமல்,
என் நிஜத்தில் நிழலாய்
தொடருகிறது.
என்னை எனக்கு பிடிக்காமல் செய்த புயல் காற்றும் நீ தான்..
என் வலிகளை வருடி செல்லும் தென்றலும் நீ தான்...
என் மரணம், என் உடலில் உயிர் போன பின்பு வருவதில்லை..
நீ என்னை கண்டுகொள்ளாமல் இருக்கும் சிறிய தருணங்களில் கூட வந்துவிடும்..
************************
கனவின் மேலடுக்கில், கற்பனையொன்று எழுந்தது..
அதிலே, நீ என்னை விட்டு விலகி செல்லும் பிம்பம் ஒன்று தெரிந்தது..
இது நிஜமில்லை, கனவுமில்லை..
கனவில் ஓர் கற்பனையென்று ,
என் மனது அறிந்தாலும் ..
என் மனம் ஏனோ முட்கள் தைத்த இதயமாய் வலித்தது..
**********************
இன்றை இறக்கடித்து,
நாளையும் தொடரும் நாளையே!
நீ இறக்கடித்த இன்றைய பொழுதுகள்,
என் நினைவின் துயரமாய்,
இறவாக்காலமாய்,
என்னுள் தேங்கியது..
நீயோ எதிர்காலம் என்ற,
எதிர்பாரா காலத்தை தொடங்கி,
என் துயரத்தை நீட்டி செல்கிறாய்.
******************************
கரையில்லா கடலொன்று,
கரையாய் நீ அங்கு...
விரல் நீட்ட , கரம் பிடித்தேன்..
வாழ்வெனும் வரம் தந்தாய்.
இன்றை இறக்கடித்து,
நாளையும் தொடரும் நாளையே!
நீ இறக்கடித்த இன்றைய பொழுதுகள்,
என் நினைவின் துயரமாய்,
இறவாக்காலமாய்,
என்னுள் தேங்கியது..
நீயோ எதிர்காலம் என்ற,
எதிர்பாரா காலத்தை தொடங்கி,
என் துயரத்தை நீட்டி செல்கிறாய்.
******************************
கரையில்லா கடலொன்று,
கரையாய் நீ அங்கு...
விரல் நீட்ட , கரம் பிடித்தேன்..
வாழ்வெனும் வரம் தந்தாய்.
****************************
அழகியலை சப்தமாய் வாசிக்கும் மௌன பூக்கள் ..
No comments:
Post a Comment