Friday, March 18, 2016

Best One Liners

கனவுகள் மட்டும் இல்லையெனில், என்றோ கண்ணீரில் கரைந்திருப்பேன்!

கோபமும் வெறுப்பும் தீர்ந்த பின், எஞ்சி நிற்பது அன்பு
மட்டுமே!

அளவில்லா காதல் , அடுத்த நிமிட வெறுப்பு..
முரண்களின் உருவம் நீ!

மற்றவர்களை விட உன் நேர்மை அதிகமானால்
எளிதில் சந்தேகிக்க படுவாய்!

மௌனத்தின் கற்பனையெல்லாம் - உன்னோடு
பேச முடியாத வார்த்தைகள் தான்!

உன் வண்ணங்கள்  தீர்வதில்லை, அவை அழகிய ஓவியமாகின்றன!

மௌனத்தின் வேர்களில் இருந்து புன்னகை முளைக்கும்!
புன்னகையின் முடிவில் இருந்து உறவுகள் பூக்கும்!

பிரிவை சந்திக்காத மனிதன் எவனும் இல்லை..
பிரிவினால் மனிதன் இறப்பான் எனில்,
இவ்வுலகம் இன்று இல்லை!

இக்கணம் பிரிவு அல்ல தோழி!
இக்கணமே நம் நினைவுகள்தானடி தோழி!

அழகியலை சப்தமாய் வாசிக்கும் மௌன பூக்கள் ..

ஒளியைத் தேடி..

மறையாத தொலைவில்,
மறைந்த நிலவொன்றின் ஒளி தேடி 
தேயாத மாலை பொழுதில் அலைகிறேன்!

மாலை தேய்ந்து , இரவு வந்து 
கனவில் உழன்று , உன்னை கண்டு 
நிலவை அடைந்தேன்.
ஒளியின் சிதறல் கண்களை நனைக்க,
விழிக்கையிலே உன் காதலை புரிந்தேன் !

மௌனங்கள்

நீல வானத்தின் மௌனங்கள் 
மழை பெய்யும் போது கரைகிறது!

மௌனத்தில் மறைந்த பூக்களால் 
வாசத்தை மறைக்க முடியவில்லை!

இரவின் மௌனம் பகலில் தொலையும்!
உந்தன் மௌனம் புன்னகையில் தொலையும்!

சலனமற்று போன என் இமைகளை,
உன் மௌனப்புன்னகை - சற்றே 
விழித்தெழ செய்தது!

உன் மௌனம் என் காதில் மட்டும் 
ஒலிக்கும் மிகப்பெரிய சப்தமாய் மாறி போனது !

தீர்ந்து போன உன் நட்பின் முடிவில் 
எஞ்சி நிற்பது உன் மௌனக்கனவுகளே!

உன் மௌனம் தாண்டினால்,
உன்னில் என்னை பார்க்கிறேன்!

மௌனத்தின் நிசப்தம் ஒன்றும் அமைதி அல்ல!
மௌனம் காயங்களை மறைக்கும் கவிதை!

உன் மௌனங்கள் வன்முறையானது,
நீ என்னை விட்டு விலகி சென்ற போது!

மௌனத்தின் கற்பனையெல்லாம் - உன்னோடு 
பேச முடியாத வார்த்தைகள் தான்!

Sunday, December 01, 2013

பேசா மொழி!

எப்போதும் நிசப்தமாய் இருப்பதற்கு
மௌனம் ஒன்றும் ஊமை அல்ல!
மௌனம் ஒரு பேசா மொழி!
மௌனம் உணர்வுகளின் கதவு!
பூட்டப்பட்ட உணர்வுகள்,
பிரிவின் துயரமாய் இருந்து - இறுதி வரை 
மௌன குரலாய் மடிந்து போகின்றன!
மௌனத்தின் சாவி நம்மை அறியாமல் 
களவாடப்படுகிறது!
களவாடிய மனதுக்கு மௌனத்தின் 
வலிகள் புரிவதில்லை! - 
இல்லை! இல்லை!
பல சமயங்களில் அதற்கு மௌனமே புரிவதில்லை!
புரிந்து கொள்ளப்படாத என் மௌனத்தின் ஏமாற்றம்,
கண்ணீரை மௌனமாக்கியது!
மொழிகளை மௌனமாக்கியது!
உணர்வுகளை மௌனமாக்கியது!
இரவின் இருட்டு மௌனத்தின் போர்வையனது!
மௌனத்தின் கண்களோ விடியாத இரவுக்காக 
சப்தமாய் வேண்டி கொள்கிறது!

நதியோரத்தில் ஓர் அழகிய வனம்!
எதை எழுத!

ஏதோ ஒரு அழகிய நதிக்கரை ஓரத்து முதல் மரத்தில்,
உங்கள் பெயர்களைஎழுத நினைத்தேன்!
நேரங்கள் சென்றாலும், ஒவ்வொரு எழுத்தையும்
நானேஎழுத நினைத்தேன்!
நட்பின் காரணங்கள்! நண்பன்! நட்பு! - இந்த மூன்றில்
நட்பே என்னை செதுக்க கூறியது!
பிழையில்லாமல் எழுத நட்பின் காரணங்கள் உள்ளது!
எழுதிய வலிகளை  மறக்க நண்பனாய் நீ!

பாரம் உணரும் மனம் தூரம் அறியாது!
நினைவுகளை அனுமானிக்க முடிய வேகத்தில்
நேசிக்கும் உயிரிடத்தில் செலுத்தும்!
மனக்கூட்டிலே உறவுகள் பிறக்கின்றன!
வேஷம் தரிக்காத முகத்திடம்
அடைக்கலம் ஆகின்றன!

இதோ இங்கு இரு மனம் இணைவதை பார்க்கிறேன்!
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து!
இறுதியில் கைகோர்த்து, உள்ளம் கோர்த்து!
இதோ ஒரு வரலாறு தொடங்கவிருக்கிறது!

அடுத்தடுத்த மரங்களில் உங்கள்
கதைகளை எழுத செல்கிறேன்!
சில எழுத்துகள் பிழையானால் - அவற்றை
ஓவியமாக்க முயற்சி செய்வேன்!

எழுத்தும் ஓவியமுமாக
மரங்கள் அதிகரிக்க,
அழகிய வனமாய் மாறியது
அந்த அழகிய நதிக்கரை!
அமைதியாய் இருந்த நதி,
உன் கதைகளை கூறி,
சலசலவென ஓடியது!

அன்றும் நான் நதியின் மற்றொரு கரையில்
நின்று கொண்டு நட்போடு - நினைவுகளை
தேடி கொண்டிருப்பேன்!