எதை எழுத!
ஏதோ ஒரு அழகிய நதிக்கரை ஓரத்து முதல் மரத்தில்,
உங்கள் பெயர்களைஎழுத நினைத்தேன்!
நேரங்கள் சென்றாலும், ஒவ்வொரு எழுத்தையும்
நானேஎழுத நினைத்தேன்!
நட்பின் காரணங்கள்! நண்பன்! நட்பு! - இந்த மூன்றில்
நட்பே என்னை செதுக்க கூறியது!
பிழையில்லாமல் எழுத நட்பின் காரணங்கள் உள்ளது!
எழுதிய வலிகளை மறக்க நண்பனாய் நீ!
பாரம் உணரும் மனம் தூரம் அறியாது!
நினைவுகளை அனுமானிக்க முடிய வேகத்தில்
நேசிக்கும் உயிரிடத்தில் செலுத்தும்!
மனக்கூட்டிலே உறவுகள் பிறக்கின்றன!
வேஷம் தரிக்காத முகத்திடம்
அடைக்கலம் ஆகின்றன!
இதோ இங்கு இரு மனம் இணைவதை பார்க்கிறேன்!
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து!
இறுதியில் கைகோர்த்து, உள்ளம் கோர்த்து!
இதோ ஒரு வரலாறு தொடங்கவிருக்கிறது!
அடுத்தடுத்த மரங்களில் உங்கள்
கதைகளை எழுத செல்கிறேன்!
சில எழுத்துகள் பிழையானால் - அவற்றை
ஓவியமாக்க முயற்சி செய்வேன்!
எழுத்தும் ஓவியமுமாக
மரங்கள் அதிகரிக்க,
அழகிய வனமாய் மாறியது
அந்த அழகிய நதிக்கரை!
அமைதியாய் இருந்த நதி,
உன் கதைகளை கூறி,
சலசலவென ஓடியது!
அன்றும் நான் நதியின் மற்றொரு கரையில்
நின்று கொண்டு நட்போடு - நினைவுகளை
தேடி கொண்டிருப்பேன்!
No comments:
Post a Comment