Sunday, December 01, 2013

பேசா மொழி!

எப்போதும் நிசப்தமாய் இருப்பதற்கு
மௌனம் ஒன்றும் ஊமை அல்ல!
மௌனம் ஒரு பேசா மொழி!
மௌனம் உணர்வுகளின் கதவு!
பூட்டப்பட்ட உணர்வுகள்,
பிரிவின் துயரமாய் இருந்து - இறுதி வரை 
மௌன குரலாய் மடிந்து போகின்றன!
மௌனத்தின் சாவி நம்மை அறியாமல் 
களவாடப்படுகிறது!
களவாடிய மனதுக்கு மௌனத்தின் 
வலிகள் புரிவதில்லை! - 
இல்லை! இல்லை!
பல சமயங்களில் அதற்கு மௌனமே புரிவதில்லை!
புரிந்து கொள்ளப்படாத என் மௌனத்தின் ஏமாற்றம்,
கண்ணீரை மௌனமாக்கியது!
மொழிகளை மௌனமாக்கியது!
உணர்வுகளை மௌனமாக்கியது!
இரவின் இருட்டு மௌனத்தின் போர்வையனது!
மௌனத்தின் கண்களோ விடியாத இரவுக்காக 
சப்தமாய் வேண்டி கொள்கிறது!

நதியோரத்தில் ஓர் அழகிய வனம்!




எதை எழுத!

ஏதோ ஒரு அழகிய நதிக்கரை ஓரத்து முதல் மரத்தில்,
உங்கள் பெயர்களைஎழுத நினைத்தேன்!
நேரங்கள் சென்றாலும், ஒவ்வொரு எழுத்தையும்
நானேஎழுத நினைத்தேன்!
நட்பின் காரணங்கள்! நண்பன்! நட்பு! - இந்த மூன்றில்
நட்பே என்னை செதுக்க கூறியது!
பிழையில்லாமல் எழுத நட்பின் காரணங்கள் உள்ளது!
எழுதிய வலிகளை  மறக்க நண்பனாய் நீ!

பாரம் உணரும் மனம் தூரம் அறியாது!
நினைவுகளை அனுமானிக்க முடிய வேகத்தில்
நேசிக்கும் உயிரிடத்தில் செலுத்தும்!
மனக்கூட்டிலே உறவுகள் பிறக்கின்றன!
வேஷம் தரிக்காத முகத்திடம்
அடைக்கலம் ஆகின்றன!

இதோ இங்கு இரு மனம் இணைவதை பார்க்கிறேன்!
எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து!
இறுதியில் கைகோர்த்து, உள்ளம் கோர்த்து!
இதோ ஒரு வரலாறு தொடங்கவிருக்கிறது!

அடுத்தடுத்த மரங்களில் உங்கள்
கதைகளை எழுத செல்கிறேன்!
சில எழுத்துகள் பிழையானால் - அவற்றை
ஓவியமாக்க முயற்சி செய்வேன்!

எழுத்தும் ஓவியமுமாக
மரங்கள் அதிகரிக்க,
அழகிய வனமாய் மாறியது
அந்த அழகிய நதிக்கரை!
அமைதியாய் இருந்த நதி,
உன் கதைகளை கூறி,
சலசலவென ஓடியது!

அன்றும் நான் நதியின் மற்றொரு கரையில்
நின்று கொண்டு நட்போடு - நினைவுகளை
தேடி கொண்டிருப்பேன்!

கனவு!

உன் நினைவென்ற கனவை தேடி
உறங்க செல்கிறேன்!
நிஜமென்ற வெளிச்சம் வந்து,
உன் நினைவென்ற கனவை கொன்றது!
இன்பம் பாதி துயரம் மீதி என,
கனவும் நிஜமாய் போனது!

Saturday, February 23, 2013

பிரிவின் நினைவுகள்!

எதையோ இழந்தேன்!
அதையே நினைத்தேன்!
இதழ்கள் சிரிக்க,
இதயம் நொறுங்க,
முரண்களாய் திரிந்தேன்!
கனவும் நினைவும் 
உணர்வை உருக்க,
உணரவேண்டிய நான் 
உன்னில் தொலைந்து 
இழந்ததை தேடினேன்!
நீயோ இதயம் மூடி,
இன்னல் மறைத்து,
பக்குவமாய் வெளியில் எடுத்து 
என்னை வைத்தாய்!
விதி எனும் குத்தீட்டிகள்,
உன் இதயத்தில் திரியும் எனைதான் 
முதலில் கொல்லும் என நினைத்தாயோ!
பொய்யின் காதல் உனதெனில்,
நிலம் கண்ட கடல் மீனாய் இறந்திருப்பேன்!
மெய்யின் காதல் நமதென்பதாலே,
பிரிந்தும் மகிழ்கிறோம்!
விதியின் போக்கிலே - வாழ்வின் 
ஆட்டம் தொடர்கிறோம்!
தூரங்கள் கடந்து, தோல்கள் சுருங்கி 
மரணம் தொடும் அவ்வேளையில்,
உன் நினைவுகள் தேடி - நான் 
சிந்தும் கண்ணீரில் 
குத்தீட்டிகளின் முனைகள் மழுங்கி 
நம்மின் காலுக்கு அடியிலே 
நமக்கும் முன் இறந்து போகும்!.
நாமோ விதியை வென்று 
இறந்தும் வாழ்வோம்!

பிரிவல்ல வாழ்க்கை !
பிரிவின் இனிய நினைவுகளே வாழ்க்கை!