Friday, July 25, 2008

கோமதி!

கோமதி பள்ளிக்கு செல்கிறாள்!
ஆம்! இன்று முதல்
கோமதி பள்ளிக்கு செல்கிறாள்!
பிஞ்சு விரல்களில் கந்தக நஞ்சு தேய,
ஈரஞ்சு வயதிலேயே தங்கைக்கு - தாலாட்டு
பாடிய கோமதி பள்ளிக்கு செல்கிறாள்!
அவளுடைய கருப்பு பக்கங்களை - வெள்ளை
எழுத்துக்களால் நிரப்ப போகிறாள்!
உயர பறக்கும் ஊர் குருவியின்
விலாசம் கேட்க போகிறாள்!
தப்பி பிழைத்த அவள்
புதிய விடியலை நோக்கி செல்கிறாள்!
ஆம்! இன்று முதல்
கோமதி பள்ளிக்கு செல்கிறாள்!

2 comments:

Unknown said...

Un kavithaigalila ennaku mikavum piditha kavithai ethu...

Unknown said...
This comment has been removed by the author.