Friday, July 25, 2008

வாழ்க்கை உனக்காகதான்!.......


வாழ்க்கை ஒன்றும் சூதாட்டம் அல்ல,
எல்லாம் அதிர்ஷ்டத்தால் வருவதற்கு!
இன்பத்தை தேட - சுயநலப்
பகடையை உருட்டாதே!
நிச்சயம் பகடையின் வெற்றி - பாம்பைத்
தாண்டி தான் போக வேண்டும்!
பரமபதம் வாழ்க்கை ஒன்றும்
தேவை இல்லை உனக்கு!
விழித்திரு! சிரித்திரு! கை கொடுத்திரு!
வீரமாயிரு! அன்பாயிரு! புரிந்திரு!
ஞாயிறின் வெளிச்சத்தையும்
திங்களின் குளுமையையும் காட்டிரு!
கோபம் விடு! பொறாமை விடு!
வீணான விவாதம் விடு! பேராசை விடு!
எதிர்பார்ப்பை விடு! கண்ணீரை விடு!
கண்கள் சிவக்க பேசாதே!
உன் ஒளி கண்கள் ஒன்றும் அதற்காக இல்லை.
பிறர் இதயம் விரும்ப வாழ்ந்திடு!
இந்த உலகம் உனக்காகதான்!........

No comments: