உன் கால் தடங்களில்
என் பாதம் பற்றி நடந்த போது,
நான் செல்ல வேண்டிய தூரம் குறுகியது!
உன் கை பற்றி நான் நடந்த போது,
குறுகிய தூரம் மறுபடியும்
நீளாதா என்று தோன்றியது!
உன்னுடைய ஒவ்வொரு அங்கமும்
சுவாசிக்கின்றன! - அதை நான்
உன் அருகில் நெருக்கமாய் அமர்ந்திருக்கும் போது,
மெலிதான வெப்ப காற்றில் உணர்கிறேன்!
இமை மூடாமல் எனை பார்க்கும் உன் கண்கள்,
இன்று அந்த கன நொடி பொழுதில் ,
கண் சிமிட்டிய போது,
கிட்டதட்ட நான் இறந்து போயிருந்தேன்!
உன் மெல்லிய இதழ்களின் ஈரத்தில்,
என் தாகம் தணியும் எனில்,
இதழ்களை அடிக்கடி உள் வாங்கி
ஈரப்படுத்தி கொள்!
நான் உயிர் வாழ்வதற்காக!
1 comment:
super lines....
Post a Comment