மீள முடியா கனவில் சிக்கி கொண்டேன் போல!
இதோ இந்த நொடியில் உன்னை காணும்போதும் கூட
கனவில் இருப்பதாய் உணர்கிறேன்!
மேகங்களின் கருங்கூந்தலால்,
மின்னல் வெளிச்ச பார்வையினால்,
மழை வருமோ என எண்ணி - ஒதுங்க இடம் தேடி
உன் சேலை தலைப்பை தேடி அலைகிறேன்!
உன் மெல்லிய மௌன புன்னகை,
இரைச்சல் மிகுந்த இந்த மாநகரத்தில் - எனக்கு
மட்டும் பெரிதாய் கேட்பது ஏன்? - உண்மையில்
என் மனம் காதலில் உள்ளதா? -இல்லை
கனவில் உள்ளதா?
என் அருகில் வந்து,என் கன்னத்தை கிள்ளி
உணர்த்தி செல் பெண்ணே!
2 comments:
wow.....super
nalla irruku
nalla kavidhai elludhuringa :-)
Adada adada..... Kavithai👍
Post a Comment